முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி காலமானார்.... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி. இவர் பெருந்தலைவர் கே. காமராசரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டவர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 15 ஆண்டுகள் தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தவர். அதே போல் இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிளவுபட்ட காலத்தில் காமராசரின் என்.சி.ஓ.வில் சேர்ந்தார்.அவரின் மறைவுக்குப் பிறகு, கருப்பையா மூப்பனாருடன் கட்சியை இந்திரா காங்கிரசுடன் இணைத்தார். இதன் பிறகு அதிமுகவில் சேர்ந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

1989 ல் ஜெயலலிதா அணி சார்பில் வெற்றிபெற்ற 28 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். 1991ல் கிராமப்புற தொழில்துறை அமைச்சரானார். துரை இராமசாமி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு சார்பிலும் , அதிமுக சார்பிலும் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
