மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார்… சூடு பிடிக்கும் அரசியல்களம்!

தமிழகத்தில் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது முன்னால் எம்எல்ஏ விஜயகுமார் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் வழங்கியுள்ளார். இந்நிலையில்தான் தற்போது அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!