நேபாள முன்னாள் பிரதமர் ஓலிக்கு ஜாமீன்... பெரும் பரபரப்பு!

 
நேபாளம் நேபாளம்

நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக 'ஜென்சி' அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் ரத்தக் களரியாக மாறியது. அந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளையே அதிர வைத்தது. இந்த வன்முறைக்கு அறநெறிப் பொறுப்பேற்று அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு ஆட்சியும் கலைக்கப்பட்டு அரசியல் சூழலே தலைகீழாக மாறியது.

இந்தப் போராட்ட ஒடுக்குமுறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த மார்ச் 28-ஆம் தேதி முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலி மற்றும் அப்போதைய உள்துறை மந்திரி ரமேஷ் லெகக் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நேபாள சுப்ரீம் கோர்ட்டு, அவர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகினர். 75 வயதான ஓலி மற்றும் 62 வயதான ரமேஷ் லெகக் ஆகியோரின் இந்தச் சிறைவாசம் நேபாள அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த கையோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கே.பி.சர்மா ஓலி, ஆளும் வர்க்கத்தின் மீது தனது கடும் கோபத்தைக் கொட்டியுள்ளார். எந்தவிதமான ஆதாரமும் இன்றி, வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே 13 நாட்கள் தன்னைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். "இப்போது நீதி வென்றுள்ளது" என்று அவர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை, நேபாள அரசியலில் மீண்டும் ஒரு பெரும் புயலை வீசச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்