"கோப்பையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள்" - இந்திய வெற்றியை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது குறித்து தன்வீர் அகமது பல சர்ச்சை கருத்துகkளை முன் வைத்துள்ளார். அவர் தனது யூடியூப் துபாயில் தயாரிக்கப்பட்ட ஆடுகளம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததாக ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபியை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2025, மார்ச் 9ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது மற்றும் 3 வது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி 76 ரன்கள் எடுத்து போட்டியில் பெரும் பங்கு வகித்தார். அவர் போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் வெற்றியால் கோபமடைந்த தன்வீர், 'ஜெய் ஷா விரும்பியது இதுதான்' என்று கூறி இந்திய ரசிகர்களை கோபமடைய செய்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் ஜெய் ஷா விரும்பியதாகவும் அதனால் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை மாற்றி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்வீர் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மைதானம் மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது எனவும் இது பொறாமையால் உண்டான பேச்சு எனவும் குறிப்பிட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அற்புதமாக விளையாடி போட்டியில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவைத் தவிர, அணியின் மற்ற வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய சாதனையாகும், மேலும் இது அணிக்கு 3 வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியைப் பெற்றுத் தந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!