இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவ் திடீர் கைது... தலைநகரில் பரபரப்பு!
இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவ். இவர் மீது அமெரிக்கா FBI ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன்படி நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குரு பத்வந்த் குன்னுவை கொலை செய்ய அவர் சதி செய்ததாக புகார் தெரிவித்திருந்தது. இதற்காக நிகில் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
Ex-RAW official declared wanted by FBI in Gurpatwant Pannun case. pic.twitter.com/LQc4FNJ4v8
— Parteek Singh Mahal (@parteekmahal) October 18, 2024
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இந்தியா குழு அமைப்பதாக உறுதி கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவை தலைநகர் டெல்லியில் சிறப்பு தனி படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அமெரிக்க நீதித்துறை குற்ற பத்திரிக்கையில் புகைப்படத்துடன் கூடிய குற்றவாளியாக விகாஷ் யாதவை அறிவித்திருந்தது. கூலிக்கு கொலை செய்தல் பண மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீஸ் சார் விகாஷ் யாதவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
