பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் காலமானார்... ரசிகர்கள் இரங்கல்!

 
ஃபிரெட் ஸ்டோல்


 
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும்  புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் ஃபிரெட் ஸ்டோல் . இவர், விளையாட்டு வர்ணனையாளரும் கூட. இவர்  காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 86. அந்நாட்டின் சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  இந்நிலையில், அவரது மரணம் குறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் செயல் தலைவர் க்ராய்க் டில்லே  டென்னிஸ் விளையாட்டு வீரராகவும் வர்ணனையாளராகவும் ஃபிரெட் ஸ்டொல் ஓர் முக்கிய புள்ளியாக அறியப்படுவார்.  அவரது சாதனைகளும், டென்னிஸ் விளையாட்டின் மீதான அவரது தாக்கமும் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஃபிரெட் ஸ்டோல்
 
மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிஸ் கோப்பை அணியின் நட்சத்திர விரரான ஃபிரெட், வீரராக ஓய்வு பெற்ற பிறகு  பயிற்சியாளராகவும், கூர்மையான வர்ணனையாளராகவும் தம்மை  டென்னிஸ் விளையாட்டில் நிலைநிறுத்திக் கொண்டதாக  புகழாரம் சூட்டியுள்ளார்.முன்னதாக, ஃபிரெட் 1962-69 வரையிலான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 10 முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 7 முறை மிக்ஸ்ட் டபுல்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார். 

ஃபிரெட் ஸ்டோல்

ஃபிரெட் கடந்த 1965 பிரெஞ்சு ஓபன் போட்டியில் டோனி ரோச்சை வீழ்த்தி பட்டம் வென்று வாகை சூடியுள்ளார்.  பின்னர், 1966 ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜான் நியூகோம்பை வீழ்த்தி, நம்பர் 1 தரவரிசையில் இடம் பிடித்தார்.இந்நிலையில், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு  ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஃபிரெட் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அவரது மகனான சாண்டன் என்பவரும் முன்னாள் டென்னிஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web