வைரல் வீடியோ... “அண்ணன் மேல பைத்தியமா இருந்தோம், கடைசில தான் தெரிந்தது அண்ணனே பைத்தியம்னு”… சீமானை கழுவி ஊற்றும் முன்னாள் நாதக நிர்வாகி!

 
சீமான்
 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் . இவர் சமீபத்தில்  பெரியார் பற்றிய கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகி வருகின்றனர். அவர்கள்  சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில்  தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி ஒருவர் சீமான் பற்றி விமர்சனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பின்னர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசியலில் இருக்க வேண்டும் என எண்ணி திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து அவர் ”  சீமான் ஒரு பேச்சாளர். அவர் ஊர் ஊராக சென்று பேசிவிட்டு ரூ 500  வாங்கிவிட்டு ஹோட்டலில் தூங்கி எழுந்து போகக்கூடிய ஆள்.‌ அவரைப் போய் திடீரென்று ஒரு தலைவராக்கி கார் வீடு பங்களா என்று கொடுத்தவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவேளை இவர் எம்எல்ஏ ஆகாமல் நமக்கு பின்னால் வந்த ஒருவர் எம்எல்ஏ ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பதறுவார்.

சசிகலாவையே ஓரம் கட்டிய போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கக் கூடியவர் சீமான். இவர் பெரிய பயந்தாங்கோலி. ஆனால் வெளியில் அப்படி காட்டிக் கொள்ள மாட்டார். அவருடைய நிர்வாகம் டோட்டல் டேமேஜ். யாருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பது யாரை கவுன்சிலராக நிறுத்துவது என அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஒரு தொகுதி என்றால் ஒரு தொகுதி மட்டும் தானே. ஆனால் அவர் அதனை 38 தொகுதிகளாக பிரி என்கிறார். அவர் மனதளவில் அப்செட் ஆகிவிட்டார். நாங்கள் அண்ணன் மீது ரொம்ப பைத்தியமா இருந்தோம். ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அண்ணனே ஒரு பைத்தியம் ” என பேசியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web