முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் காலமானார்... ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

 
சிவராஜ் பாட்டீல்
 

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் பட்டேல். இவர் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். இவருக்கு வயது 90. 2004 முதல் 2008 வரையிலான காலத்தில் இவர் மத்திய உள்துறை மந்திரியாகப் பணியாற்றினார். மேலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் 1996 வரை மக்களவையின் சபாநாயகராகப் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து, 2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இப்படிப் பல முக்கியப் பதவிகளை வகித்தவர் சிவராஜ் பட்டேல். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், "மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பட்டேலை நாம் இழந்துவிட்டோம். அவர் பொது வாழ்வில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். "நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சிவராஜ் பட்டேல் மறைவால் மிகுந்த சோகமடைந்தேன்" என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!