தமிழகத்தில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் - ஜனவரி 18 கடைசி தேதி; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

 
வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வரும் சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிசம்பர் 27 (சனிக்கிழமை), டிசம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை), ஜனவரி 3, 2026 (சனிக்கிழமை), ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 18 வயது நிரம்பிய தகுதியுடைய புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள  படிவம் 6யை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம் காரணமாகவோ அல்லது இறந்தவர்களின் பெயர்களை நீக்கவோ படிவம் 7யைப் பயன்படுத்தலாம்.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

முகவரி மாற்றம், புகைப்படம் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் புதிய அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் படிவம் 8யை பயன்படுத்தலாம். 

வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பட்டியலைப் பார்வையிடலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் (Voter Helpline App அல்லது NVSP போர்ட்டல்) விண்ணப்பிக்க முடியும் என்றாலும், இந்த நேரடி முகாம்கள் பொதுமக்களுக்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.

வாக்காளர் பட்டியல்

இந்தச் சிறப்பு முகாம்கள் தவிர, வரும் ஜனவரி 18-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!