மொராக்கோவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி; மீட்பு பணிகள் பணிகள் தீவிரம்!

 
கட்டடம்

மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரான ஃபெஸ் (Fes) நகரில், அடுத்தடுத்து அமைந்திருந்த இரண்டு நான்கு மாடிக் குடியிருப்பு கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் மொராக்கோ சந்தித்துள்ள இரண்டாவது மோசமான கட்டட விபத்து இதுவாகும்.

கட்டடம்

இடிந்து விழுந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் மொத்தம் எட்டு குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைகாக அனுப்பப்பட்டனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கட்டடம்

விபத்துக்கான காரணம் குறித்து இது வரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த மே மாதம் மொராக்கோவில் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!