நண்பனிடம் லட்சக்கணக்கில் மோசடி.. 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக நிர்வாகி கைது!

 
பிரபு

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் பிரபு, பாஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். பால் வியாபாரியான பரமசிவன், பிரபுவும்  நண்பர்கள். இதனால் பிரபு கடந்த 2008 அக்டோபர் மாதம் பரமசிவனிடம் இருந்து கடனாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். 

கமன் தொகை திருப்பி தருவதாக கூறி தலா ரூ.2.50 லட்சத்துக்கு 2 காசோலைகளை பிரபு கொடுத்துள்ளார். இந்த 2 காசோலைகளையும் பரமசிவன் 2008 டிசம்பவர் மாதம் பணம் பெறுவதற்காக  வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால், பிரபு கணக்கில் போதுமான பணம் இல்லாததால் இரு காசோலைகளும் திரும்பி வந்து விட்டன.

பிரபு

இதுதொடர்பாக பரமசிவன், பிரபுவிடம் தகவல் தெரிவித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால், பரமசிவன் கடந்த 2009 ஆம் ஆண்டில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

பிரபு

வழக்கை நீதிபதி ஜலதி, விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் மனுதாரரான பரமசிவனுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையை பிரபு அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web