பகீர்... அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி!

 
அண்ணா
 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பையனூர் பகுதியை சேர்ந்த தனசேகரிடம் இருந்து ரூ.2.5 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, அவரது மனைவி ராஜலட்சுமி மீது மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனசேகரின் இரண்டு மகள்களும், மற்ற அறிமுகமானவர்களும் பல்கலைக்கழகத்தில் வேலை பெறுவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

அண்ணா

தனசேகரிடம் ஆரம்பத்தில் ரூ.40 லட்சமும் பின்னர் கட்டுக்கட்டாக மொத்தம் ரூ.2.5 கோடியும் பெற்றதாக புகார். பணத்தை வாங்கிய பின்னரும் வேலை வழங்கப்படாததால், தனசேகர் பணத்தை திருப்பிக் கொடுக்க கேட்ட போது, கால தாழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஈடாக கொடுத்த நிலப் பத்திரமும் காணாமல் போனதாக கலாநிதி காவல்துறையில் புகார் அளித்ததும் விவகாரத்தை தீவிரப்படுத்தியது.

அண்ணா

புகாரை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் போலீஸார் கலாநிதி மற்றும் அவரது மனைவி மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் இருவரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!