ஆண்களுக்கான இலவச பேருந்து... சட்டப்பேரவையில் சுவாரஸ்யம்!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது தொகுதி வாரியான கேள்விகளுக்கு துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன. அந்த வகையில் திருவாடணை எம்.எல்.ஏ கருமாணிக்கம் தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எப்போது இலவச பேருந்து ?எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ”ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது. ஒடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் இருப்பதால் அவர்கள் வளர்ச்சிக்காக விடியல் பயணம் கொண்டுவரப்பட்டது.
ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்குவது குறித்து எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராக இருந்தால் கருத்தில் கொள்ளப்படும்.” ஆண்களும் விடியல் பயணம் கிடைக்குமா என திருவாடணை எம்.எல்.ஏ கருமாணிக்கம் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!