டிக்கெட்ட காட்டி சிட்டா பறக்கலாம்... ஐபிஎல் மேட்ச் பார்க்க இலவச பேருந்து பயணம்!

 
ஐபிஎல்


 
ஐபிஎல் போட்டிகள் இன்று சென்னையில் சென்னை- மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் எனவும்,  இவை போட்டி தொடங்கும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்பும் செல்லுபடியாகும் என பெருநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

ஐபிஎல்


சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.   இந்த போட்டியைக் காண சென்னைக்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் பெருநகர போக்குவரத்து கழகம் இந்த   அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்  கிரிக்கெட் ரசிகர்கள் இன்று நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து  மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறியுள்ளது. மாநகரப் பேருந்துகளில் ஏசி பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் இந்த திட்டம் செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது.  

ஐபிஎல்


இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணம் செய்யலாம். அண்ணா சதுக்கம் சென்னை பல்கலைகழகம் ஓமந்தூரார் பேருந்து நிறுத்தங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.  கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வித சிரமமுமின்றி போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் இந்த பேருந்து வசதிகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?