60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்… !

 
இலவச பேருந்து

தமிழகத்தில் 2021 முதல் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டம் பெண்களின் பயணச் செலவுகளை குறைத்தது. வேலை, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு பெரிதும் உதவியது. இதுபோன்ற சலுகை ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

பேருந்து

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை திமுக அரசு விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், ஓரிரு மாதங்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனால் மூத்த குடிமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரசு பேருந்து

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், அனைத்து ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்குவது சாத்தியமில்லை என்றனர். அதனால் தான் வயது வரம்புடன் இந்த திட்டம் பரிசீலிக்கப்படுகிறது என தெரிவித்தனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!