’ஃப்ரீ பயர்’ கேமால் விபரீதம்... அரசு விடுதி மாணவர்களுக்குள் அடிதடி சண்டை !

 
free fire free fire

சேலம் மாவட்டத்தில் மறவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்குள் வெளியாட்கள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு பின்னர் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.

சண்டை

கைப்பேசி விளையாட்டு விளையாடியபோது மாணவர்களின் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த பணியாட்கள்  விலக்கி வைக்க முயற்சித்த போதும் மேலும் அதிகரிக்கவே செய்தது. இந்த தகராறு பின்னர் முற்றி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. 

போலீஸ்

இதில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக வெளியிலிருந்து வந்த சிலர், மற்றொரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!