மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சிறுதானிய சிற்றுண்டி.. மீனவர்களுக்கு உதவித்தொகை.. முதல்வர் பட்ஜெட்டில் அதிரடி!

 
புதுவை

புதுவை சட்டப்பேரவையில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.  இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில், பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது. மத்திய அரசும் அண்மையில் ஒப்புதல் கொடுத்தது.

புதுவை

இந்நிலையில் புதுச்சேரியில் ரூ. 11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பட்ஜெட் உரையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி வழங்கப்படும். தமிழ்வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாடு  நடத்தப்படும். பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 11, 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில்  வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுவை

புதுச்சேரி மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மீன்துறைக்கு ரூ.1,946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ.4.5 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும், என  முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web