ஜனவரி 5ம் தேதி 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை மையமாக வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘அன்புக்கரங்கள்’ திட்டமும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 3,200 நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா ஜனவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
