அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு இலவசம்... முதல்வர் அறிவிப்பு!

 
முதல்வர்

அரசு ஊழியர்களுக்கு ஆய்வு காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் இது குறித்த  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின்  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்கப்படும். 

முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு

இதனை, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது.சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் இவைகளையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்!. தமிழக அரசு

மேலும் ரூ 211.57 கோடி  மதிப்பீட்டில் கோவை புறநகர்ப் பகுதியான பிளிச்சியில் கட்டப்படவுள்ள புதிய சிறைச்சாலை – சிறைக்காவலர் குடியிருப்புகள். சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ 457.14 கோடியில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினேன்” எனக்  கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது