அடி தூள்... மார்ச் 23ம் தேதி சிஎஸ்கே போட்டிக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!
இந்தியாவில் 18வது ஐபிஎல் சீசன் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மார்ச் 23ல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும், போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது
— Chennai Metro Rail (@cmrlofficial) March 15, 2025
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க… pic.twitter.com/LCD0A4RPln
பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல். 2025 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோரயில் நிலையத்திற்கும் இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
