பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

 
பார்திவாலா

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், நாடு முழுவதும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகளில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் ஆகியவற்றை உறுதிசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.    

இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.

பார்திவாலா

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவது, பள்ளிகளில் அவற்றை சுகாதாரமான முறையில் கையாள்வது, பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?

பள்ளிகளில் குறைந்த விலையிலோ, இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் பாதுகாப்பாக அகற்றும் வழிமுறைகளை, இந்தக் கொள்கை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

பார்திவாலா

மாதவிடாய் சுகாதாரம் குறித்து கொள்கை வகுப்பதில் மாநிலங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. மாநிலங்கள் தங்களது அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கைகளை 4 வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், மூன்று மாதங்களுக்கு உள்ளாக இந்த விவகாரம் குறித்த அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர், இவ்வழக்கில் வழிகாட்டு முறைகளுடன் கூடிய தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும், என்றனர்.
    

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web