10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு RTC பேருந்துகளில் இலவச பயணம்!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆந்திர அரசு ஒரு இனிமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் அனுமதி சீட்டை காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இந்த சலுகை கிராமப்புற மற்றும் நகரப்புற சாதாரண அரசு பேருந்துகளில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு நாட்களில் அனுமதி சீட்டை காட்டினாலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு காலத்தில் மாணவர்கள் சிரமமின்றி மையங்களுக்கு செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
