மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் ... உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவு!
மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இது வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடப்பட்டது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கேற்ற கழிப்பறைகளும் கட்டாயம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த வசதிகளை வழங்கத் தவறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
