நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. மூத்த குடிமக்களுக்கு அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா... !

 
அறுபடை வீடு

தமிழகத்தில்  இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரிந்து  ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  பொங்கல் கொடை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதன்  தொடக்க விழா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த நிலையில்  இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்துகொண்டார். அமைச்சர் இத்திட்டத்தினை தொடங்கி வைத்து  10 பேருக்கு தலா ரூ1000 க்கான காசோலைகளை வழங்கினார்.

சேகர் பாபு


இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில்  ‘முருக பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை  திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர். இவர்களின் குறையை போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.   6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர்  என  ஆண்டுக்கு 5 முறை  அழைத்து செல்லப்படுவர்.

கோவில் பணியாளர்களுக்கு ரூ.5,000/ ஊக்கத்தொகை ! சேகர் பாபு அதிரடி!

வருடத்திற்கு  1,000 பக்தர்கள் என்ற கணக்கில்  முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முயற்சி  இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம்  ஜனவரி 28ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை  நாளை முதல் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தகுதி உடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என அமைச்சர் கூறியுள்ளார்.   

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!