எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ஏசி பேருந்தில் கட்டணமில்லா பயணம்! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

 
ஏசி பேருந்து

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள், வயதில் மூத்தவர்கள் அனைவரும் இலசமாக பயணம் செய்யலாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது . தற்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உதவியாளருடன் குளிர்சாதன பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகளில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை ஏற்கனவே கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசி பேருந்து
அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் பயணிக்க அனுமதி. அதே நேரத்தில் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டணம் எதுவுமின்றி  பயணிக்கலாம். இதனை  ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

அரசு பேருந்து

குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அத்துடன் அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.  எவ்வித புகாரும் எழா வண்ணம் பணிபுரிய வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அனைத்து கிளை மேலாளர்கள் உட்பட போக்குவரத்து  அலுவலர்களுக்கு  மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web