செக் குடியரசில் சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது... ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்!

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பென்சீன் என்ற ரசாயன பொருள் கொண்டு செல்லப்பட்டது. பென்சீன் என்பது மிகவும் நச்சுத்தன்மை உடைய ஒரு ரசாயன பொருள் ஆகும். மனிதர்களிடையே இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மோசமான இந்த தனிமம் விமான எரிபொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
போலந்து நாட்டின் எல்லையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் ஹுஸ்டோபீஸ் நாட் பெச்வோ நகர் அருகே சென்றது. அப்போது சரக்கு ரயில் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ரயிலின் 15 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. அங்கிருந்த துணை மின்நிலையத்துக்கும் இந்த தீ பரவியது. இதனால் சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த நச்சுப்புகையை சுவாசித்தால் தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், கதவு, ஜன்னல்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டனர்.
முன்னதாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேசமயம் இந்த தீயில் சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 60 டன் பென்சீன் எரிந்து நாசமாகி இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!