பதறிய தோழிகள்... பள்ளி மாணவி மயங்கி விழுந்து திடீர் மரணம்!

 
தென்காசி

என்ன தான் நடக்கிறது என்றே தெரியாமல் பித்து பிடித்ததைப் போல இருக்கிறது அரசு மேல்நிலைப் பள்ளி. வகுப்பறையில் திடீரென 9ம் வகுப்பு மாணவி சரிந்து விழுந்து மரணித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றனர் தோழிகள்.

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெட்டைகுளத்தைச் சேர்ந்த மானஷா எனும் மாணவி 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி பாடவேளையின் போது வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

தென்காசி

அங்கு முதலுதவிக்குப் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் மானசா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தென்காசி

மானசா நன்றாக படிக்கக்கூடிய மாணவி எனவும், அவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீட்டு வேலைகளை அவரே செய்துவிட்டு பள்ளிக்கு வருவார் என்றும், நேற்று வழக்கம் போல், வீட்டில் காலை உணவாக பொங்கல் செய்து, சட்னி அரைத்து சக மாணவிகளுக்கும் எடுத்து வந்தார் எனவும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?