தோனி முதல் ரிஷப் பண்ட் வரை... IPL ஏல வரலாற்றில் அதிக விலை போன வீரர்கள் யார் யார்? முழு லிஸ்ட்!

 
தோனி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர், கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த டி20 கிரிக்கெட் லீக் தொடராகத் திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 19-வது சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற உள்ளது. மொத்தம் 350 வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தச் சரவெடி கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கடந்த 18 சீசன்களில், ஆரம்பத்தில் தோனி ரூ. 9.5 கோடிக்கு வாங்கப்பட்டதில் இருந்து, தற்போது ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் போனது வரை, வீரர்களின் மீதான முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.பி.எல். ஏல வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல் இங்கே:

“மீண்டும் வருவேன் ” யுவராஜ் சிங் அதிரடி அறிவிப்பு!

2008 – மகேந்திர சிங் தோனி (ரூ. 9.5 கோடி)

2009 – கெவின் பீட்டர்சன் / பிளிண்டாப் (தலா ரூ. 9.8 கோடி)

2010 – ஷேன் பாண்ட் / கீரன் பொல்லார்டு (தலா ரூ. 4.8 கோடி)

2011 – கவுதம் கம்பீர் (ரூ. 14.9 கோடி)

2012 – ரவீந்திர ஜடேஜா (ரூ. 12.8 கோடி)

2013 – கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 6.3 கோடி)

2014 – யுவராஜ் சிங் (ரூ. 14 கோடி)

2015 – யுவராஜ் சிங் (ரூ. 16 கோடி)

2016 – ஷேன் வாட்சன் (ரூ. 9.5 கோடி)

2017 – பென் ஸ்டோக்ஸ் (ரூ. 14.5 கோடி)

2018 – பென் ஸ்டோக்ஸ் (ரூ. 12.5 கோடி)

2019 – ஜெய்தேவ் உனட்கட் / வருண் சக்ரவர்த்தி (தலா ரூ. 8.4 கோடி)

2020 – பேட் கம்மின்ஸ் (ரூ. 15.5 கோடி)

2021 – கிறிஸ் மோரிஸ் (ரூ. 16.25 கோடி)

2022 – இஷான் கிஷன் (ரூ. 15.25 கோடி)

2023 – சாம் கர்ரன் (ரூ. 18.5 கோடி)

2024 – மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி)

2025 – ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி)

ரோகித் சர்மா கிரிக்கெட்

அடுத்த சீசனுக்கான (2026) மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட மொத்தம் 77 வீரர்களை அணிகள் தேர்வு செய்ய உள்ளன. முந்தைய ஏலத்தில் ரூ. 27 கோடி என்ற அதிகபட்சத் தொகைக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்ட நிலையில், நாளை நடக்கும் ஏலத்தில் அந்தச் சாதனையை முறியடித்துப் புதியச் சாதனையைப் படைக்கப் போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!