ஜெயக்குமார் துவங்கி வளர்மதி வரை... அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு - இபிஎஸ் அறிவிப்பு!

 
எடப்பாடி

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக (AIADMK) தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அதிமுக இப்போதே வகுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (டிசம்பர் 25) அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடந்த சூழலில், இன்று தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு (10 பேர்): கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவில் பின்வருவோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜெயக்குமார்

நத்தம் விஸ்வநாதன் (முன்னாள் அமைச்சர்), சி. பொன்னையன் (கழக அமைப்புச் செயலாளர்), டி. ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்), பொள்ளாச்சி வி. ஜெயராமன் (முன்னாள் துணை சபாநாயகர்), சி.வி. சண்முகம் (முன்னாள் அமைச்சர்), எஸ். செம்மலை (முன்னாள் அமைச்சர்), பி. வளர்மதி (கழக மகளிரணிச் செயலாளர்), ஓ.எஸ். மணியன் (முன்னாள் அமைச்சர்), ஆர்.பி. உதயகுமார் (சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்), வைகை செல்வன் (கழக செய்தித் தொடர்பாளர்)

குழுவின் முக்கியப் பணி:

இந்தக் குழுவினர் விரைவில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்க உள்ளனர். மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை அறிந்து, அதன் அடிப்படையில் அதிமுக-வின் 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குறுதிகள் வடிவமைக்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளர்கள் (பியூஷ் கோயல் உள்ளிட்டோர்) சந்தித்துப் பேசினர். 2026 தேர்தலுக்கான பலமான கூட்டணி அமைப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் முதற்கட்ட ஆலோசனைகள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ள நிலையில், அதிமுக-வும் தனது குழுவை அறிவித்திருப்பது தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!