செம... ஜூலை 18 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்!!

 
ரயில்

எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் நேரக்கட்டுப்பாடு காரணமாக இவை சிறிய ரயில் நிலையங்களில் நிற்பதில்லை. ஆனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருபவர்கள் குறிப்பிட்ட நிலையங்களில் நின்று செல்ல தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் பரிசீலணை செய்யப்பட்டு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல்  நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ரயில்
அதில்  குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியல் 
திருநெல்வேலி - பாலக்காடு - நெல்லை   பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில்  நின்று செல்லும். 
 சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில்  நின்று செல்லும்.
 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில்  நின்று செல்லும். 
திருநெல்வேலி  - பாலக்காடு  பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.
 ராமேஸ்வரம் - பனாரஸ்  வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும். 

டிடிஇ ரயில்


சென்னை எழும்பூர் - நெல்லை  நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
கோவை - ராமேஸ்வரம்  வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - தூத்துக்குடி  முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். 
சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர்  கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில்  ஜூலை 18 முதல் நின்று செல்லும் . இந்த தகவல்கள் அந்தந்த பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web