ராணுவப் பயிற்சி முதல் 8 மொழிகள் வரை... 150 வருடங்களுக்குப் பின் ஸ்பெயினுக்கு ராணி - அசத்தும் இளவரசி லியோனார்!

 
ஸ்பெயின் ராணி லியோனார்

ஸ்பெயின் நாட்டின் தற்போதைய மன்னர் ஆறாம் பெலிப் அவர்களின் மூத்த மகளான இளவரசி லியோனார் (Leonor), அந்நாட்டின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 1868-க்குப் பிறகு ஸ்பெயினை ஆளப்போகும் முதல் ராணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

லியோனார்

மன்னர் பெலிப் - ராணி லெடிசியா தம்பதியின் மூத்த மகளான இவர், கடந்த 2014-லேயே 'அஸ்டூரியாஸ் இளவரசி' உள்ளிட்ட பாரம்பரிய வாரிசு பட்டங்களைப் பெற்றார். வருங்கால ராணி என்பதால், ஸ்பானிஷ் மொழி மட்டுமின்றி கேடலான், ஆங்கிலம் என மொத்தம் 8 மொழிகளைக் கற்றுத் தேர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் சட்டப்படி, அந்நாட்டின் மன்னர் அல்லது ராணியே முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருப்பார். இதற்காக இளவரசி லியோனார் கடந்த சில ஆண்டுகளாகத் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும் மிகக் கடுமையான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஒரு சாதாரண வீரரைப் போலவே சீருடை அணிந்து, களத்தில் இறங்கி அவர் மேற்கொண்ட பயிற்சிகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.

லியோனார்

ஸ்பெயினை கடைசியாகத் தன்னிச்சையாக ஆட்சி செய்த பெண் அரசி, இரண்டாம் இசபெல்லா ஆவார். அவர் 1868-ல் தனது பதவியை இழந்தார். அதன்பிறகு கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர்களே ஸ்பெயினை ஆட்சி செய்து வந்தனர். தற்போது மன்னர் பெலிப்பிற்குப் பிறகு லியோனார் அரியணை ஏறும்போது, ஸ்பெயின் மீண்டும் ஒரு பெண் அரசியின் ஆட்சியின் கீழ் வரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!