இன்று முதல் இந்த 8 எக்ஸ்பிரஸ் ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பயணிகளின் வசதிக்காக இன்று பிப்ரவரி 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் குறிப்பிடப்பட்டுள்ள 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும். ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22675): எழும்பூர் - திருச்சி, கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12633): எழும்பூர் - கன்னியாகுமரி, புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16115): எழும்பூர் - புதுச்சேரி, பொதிகை எக்ஸ்பிரஸ் (12661): எழும்பூர் - செங்கோட்டை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637): எழும்பூர் - மதுரை, நெல்லை எக்ஸ்பிரஸ் (12631): எழும்பூர் - திருநெல்வேலி, மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179): எழும்பூர் - மன்னார்குடி, சேலம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22153): எழும்பூர் - சேலம் ஆகிய ரயில்கள் நின்று செல்லும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், தி.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பயணிகள் எளிதாக ரயில்களில் ஏறவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
