பொதுமக்கள் அதிர்ச்சி... இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!
இன்று நவம்பர் 8ம் தேதி காலை முதல் தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா பால், தயிர் விலை ரூ.2 உயர்த்தப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த புதிய விலை நிலவரப்படி ஆரோக்கிய நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36ல் இருந்து ரூ.37ஆகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.65ல் இருந்து ரூ.67 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31ல் இருந்து ரூ.32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
அதேபோல 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30ல் இருந்து ரூ.32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து ரூ.38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66ல் இருந்து ரூ.68 ஆகவும் உயர்த்தப்படுகிறது.ஆரோக்யா நிறுவனத்தின் இந்த விலையேற்ற நடவடிக்கைக்கு பால் முகவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். ‘இது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் பால் விலையை ஏற்ற தூண்டுவது போல இருக்கிறது. எனவே இந்த விலையேற்றத்தை திரும்பப்பெற வேண்டும்' என்று பால் முகவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!