சொமேட்டா டெலிவரி பாய் முதல் தொழில்முனைவோர் வரை… இன்ஸ்பிரன்ஸ்ஷனல் வீடியோ !
நவி மும்பையைச் சேர்ந்த அஜித் சிங் ரத்தோரின் வாழ்க்கைப் பயணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சுமார் 18 மாதங்களுக்கு முன்பு அவர் ஸொமாட்டோ டெலிவரி ஊழியராக வேலை தொடங்கினார். கார்கர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் உணவு கொடுக்கச் சென்றபோது, பைக்கை உள்ளே நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
அன்றைய தினம் ஊழியர்களும் குடியிருப்பாளர்களும் மரியாதையின்றி நடந்துகொண்டனர். அது அவரை மனதளவில் மிகவும் காயப்படுத்தியது. ஆனால், இன்று அதே இடத்திற்கு அவர் தனது சொந்த நிறுவன வாடிக்கையாளரை சந்திக்க விலையுயர்ந்த எஸ்யூவி காரில் வந்தார்.
அன்று தடுத்த பாதுகாப்பு பணியாளர்களே இன்று சல்யூட் அடித்து வரவேற்றனர். “உழைத்தால் காலம் எல்லாவற்றையும் மாற்றும்” என்று அஜித் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரண டெலிவரி வேலையிலிருந்து வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர்ந்த அவரது கதை இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
