கொடைக்கானலில் மீண்டும் உறைபனி... சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

 
உறைபனி

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக வறண்ட வாடை காற்று தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த பனி, தற்போது மீண்டும் தீவிரமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் பூமி, ஜிம்கானா பகுதிகளில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்துள்ளது. அதன்மேல் பனிமூட்டமும், எதிர்மலையில் லேசான வெயிலும் காட்சியளிக்கிறது.

புல்வெளிகளில் உள்ள புற்கள் மீது முத்து மணிகள் போல் உறைபனி ஒட்டிக் காட்சியளிக்கிறது. நட்சத்திர ஏரியும் பனிமூட்டத்துடன் ரம்மியமாக தெரிகிறது. வாகனங்களின் மீதும் வெள்ளை பஞ்சு போல் உறைபனி படர்ந்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!