கணவர் சாக்லேட் வாங்கித் தராததால் விரக்தி.. காதல் மனைவி தற்கொலை !

 
நந்தினி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஹன்னூர் பகுதியில் கவுதம்- நந்தினி ( 30 ) தம்பதி வசித்து வந்தனர். கல்லூரி காலத்தில் இருந்தே காதலர்களான இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கவுதம்- நந்தினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் கவுதம் மற்றும் மனைவி நந்தினிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சலூன் கடை நடத்தி வரும் கவுதம்-க்கு கடந்த சில நாள்களாக வேலை பளு அதிகமாக இருந்துள்ளது. இதனால் விரைவாக கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு தாமதமாக வந்ததாகவுவம், மனைவியிடம் முறையாக பேசி நேரம் கழிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

நந்தினி

இதனால் கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்படி இரு நாட்களுக்கு முன்பு மனைவி நந்தினிக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தனக்கு சாக்லேட் வாங்கிதர வேண்டும் என கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். சரி வாங்கித் தருகிறேன் என கூறிவிட்டு வேலைக்குச் சென்ற கணவர், வரும்போது மறதிகாரணமாக வாங்கிவரவில்லை. அதன்பிறகு கவுதமிற்கு நந்தினி செல்போனில் அழைப்பு விடுத்தார். ஆனால், கவுதம் அழைப்பை எடுக்கவில்லை. 

இந்நிலையில், வேலைகளை முடித்துவிட்டு இரவு கவுதம் தனது வாட்ஸ்ஆப்பை திறந்து பார்த்த போது தான் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணி அளவில் மனைவி நந்தினி கணவருக்கு மேசேஜ் அனுப்பியுள்ளார். 

நந்தினி

அதில், நான் போகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள், என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்து பீதி அடைந்த கவுதம் மனைவிக்கு போன் செய்து பார்த்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காத நிலையில், பக்கத்து வீட்டுகாரர்களிடம் அலெர்ட் செய்து வீட்டிற்கு விரைந்துள்ளார். வீடு தாழிட்டு இருந்த நிலையில்  கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றபோதும் நந்தினியை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நந்தினி மரணம் தொடர்பாக கவுதம் மீது நந்தினி வீட்டார் எந்த புகாரும் இதுவரை தரவில்லை.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web