வேலை கிடைக்காத விரக்தி: பட்டதாரி வாலிபர் தற்கொலை!

 
மன அழுத்தம்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், பட்டப்படிப்பு முடித்த பின்னரும் 4 ஆண்டுகளாக எதிர்பார்த்த வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த ஆஞ்சநேயா (27) என்ற வாலிபர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாவணகெரே மாவட்டம் குட்டநிங்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயா, பட்டப்படிப்பை முடித்த பிறகு சுமார் 4 ஆண்டுகளாக வேலை தேடி வந்துள்ளார். வேலை கிடைக்காததால் மனக்கவலையில் இருந்த ஆஞ்சநேயா, இதுகுறித்துத் தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

இதற்கிடையே, ஆஞ்சநேயாவின் குடும்பத்தினர் அவரிடம் வேலைக்குச் செல்லாதது குறித்துக் கேட்டு வந்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாகச் செலவுக்குப் பணம் இல்லாமல் இருந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டதால், ஆஞ்சநேயா மேலும் மனச்சோர்வடைந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 9) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஞ்சநேயா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் இதைக் கண்டு கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிளிச்சோடு போலீஸார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில், வேலை கிடைக்காத விரக்தியே தற்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்தது. இதுகுறித்து பிளிச்சோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!