2025 ஆஸ்கார் விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

சர்வதேச அளவில் திரைப்படங்களில் மிகப்பெரிய அங்கீகாரமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அந்த வகையில் 97வது அகாடமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் முதல் முறையாக விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
2025 ஆஸ்கார் விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் :
* சிறந்த நடிகர் (ஆண்) – தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி
* சிறந்த நடிகை (பெண்) – அனோராவுக்காக மைக்கி மேடிசன்
* சிறந்த இயக்குனர் – அனோரா படத்திற்காக சீன் பேக்கர்
* சிறந்த படம் – அனோரா
* சிறந்த துணை நடிகர் – தி ரியல் பெயின் படத்திற்காக கரேன் குலின்
* சிறந்த துணை நடிகை – எமிலியா பெரெஸுக்காக ஜோ சல்டானா
* சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐ’ம் ஸ்டில் ஹியர்
* சிறந்த ஒளிப்பதிவு – தி ப்ரூடலிஸ்ட்
* சிறந்த மூல திரைக்கதை – அனோரா படத்திற்காக சீன் பேக்கர்
* சிறந்த அசல் இசை – தி ப்ரூடலிஸ்ட்
* சிறந்த ஆடை அலங்காரம் – விக்கெட் படத்திற்காக பால் டேஸ்வெல்
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ளோ
* சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸுக்காக ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலேமி
* சிறந்த முடி மற்றும் ஒப்பனை – தி சப்ஸ்டென்ஸ்
* சிறந்த தழுவல் திரைக்கதை: கான்க்ளேவ்
* சிறந்த திரைப்பட எடிட்டிங் – அனோரா
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கெட்
* அசல் பாடல் – எமிலியா பெரெஸின் எல் மால்
* சிறந்த ஆவணப்பட குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
* சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்
* சிறந்த ஒலி – டூன்: பகுதி 2
* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – டூன்: பாகம் 2
* சிறந்த நேரடி அதிரடி குறும்படம் – ஐ’ம் நாட் எ ரோபோ
விருது வழங்கும் விழாவையடுத்து டால்பி தியேட்டர் ஹாலிவுட் நட்சத்திரங்களால் ஜொலித்தது. வூப்பி கோல்ட்பர்க், அட்ரியன் பிராடி, ஜார்ஜினா சாப்மேன், எம்மா ஸ்டோன் மற்றும் ஆமி போஹ்லர் உட்பட சிவப்பு கம்பள வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!