தமிழக பட்ஜெட் .. திருக்குறள் உட்பட 500 தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ரூ.1.33 கோடி நிதி!

திமுக அரசு தனது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். தமிழகம் இந்தியாவில் பிற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது
இந்தியாவின் உற்பத்தி சக்தியாக, தமிழ்நாடு ஆட்டோமொபைல்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றில் முன்னணியில் இருந்து வருகிறது. இரண்டாவது மிக உயர்ந்த MSMEகளைக் கொண்டுள்ளது இந்நிலையில் ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தற்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு
பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!