வருங்கால முதல்வரே புஸ்ஸி ஆனந்த்... சென்னையில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்!

 
வருங்கால முதல்வரே புஸ்ஸி ஆனந்த்... சென்னையில் ஒட்டப்பட்ட  சர்ச்சை போஸ்டர்!  

இன்று சென்னையில் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்துக்கு 15 பேர் என தமிழகம் முழுவதும் இருந்து 2500க்கும் மேற்பட்டோர் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்கின்றனர். பாஸ் வைத்திருப்பவர்களை தவிர மற்றவர்களுக்கு இதில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கறாராக நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் கட்சியின் 2 ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றதுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ள  நிலையில், பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பொதுக் குழு நடைபெறும் திருவான்மியூர் மண்டபம் வரை விஜய்யை வரவேற்று போஸ்டர்களும் பேனர்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன. 

புஸ்ஸி ஆனந்த்

தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்” எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த போஸ்டர் குறித்த விளக்கத்தை தவெக தரப்பில் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web