கடாபியின் மகன் சுட்டுக்கொலை… லிபியாவில் பரபரப்பு சம்பவம்!

 
லிபியா
 

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் 1969 முதல் 2011 வரை மொம்மர் கடாபி ஆட்சி செய்தார். அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எழுந்ததில் 2011ல் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது 2வது மகன் சைப் அல் இஸ்லாம் ஜிந்தான் நகரில் வசித்து வந்தார்.

மக்கள் கிளர்ச்சியின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக சைப் அல் இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்தனர்.

பின்னர் சைப் அல் இஸ்லாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் லிபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!