கில் அணியில் இருந்து நீக்கம் ஏன்?... பதில் கூறாமல் மௌனம் சாதித்த கம்பீர் ... பரபரப்பு

 
கம்பீர்
 

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்ட நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டெல்லி விமான நிலையத்தில் வாகனத்தில் ஏறும் போது நிருபர்களின் கேள்விகளை முழுமையாக புறக்கணித்து மௌனமாக நடந்தது. "துணை கேப்டனையே தூக்கிட்டீங்க.. என்ன காரணம்?" என நிருபர்கள் தொடர்ச்சியாக கேட்டாலும், கம்பீர் யாருக்கும் பதிலளிக்காமல் காரில் ஏறி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் ரசிகர்களிடையே பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய கம்பீர், மும்பையில் நடைபெற்ற அணித் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே கூட்டத்தில் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் கில் நீக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது, "கில்லின் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணியின் சமநிலை (Team Combination) முக்கியம். டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது." கேப்டன் யாதவ் விளக்குவது, "இது ஃபார்ம் பிரச்சனை அல்ல. கில் சிறந்த வீரர்; உலகக்கோப்பைக்கான அணிச் சமநிலைக்காக மாற்றம் செய்யப்பட்டது" எனும் தகவலை வழங்கினார்.

இதனால், வருங்கால கேப்டன் என கூறப்பட்ட சுப்மன் கில் தற்போது அணியில் இல்லாமை ரசிகர்களுக்கு நிதர்சனமாக உள்ளது. கம்பீரின் விருப்பத்துடன் நடந்ததா அல்லது பிசிசிஐ அதிகாரிகள் தலையீட்டால் நடந்ததா என்பது இன்னும் சந்தேகமிருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!