ரூபாய் 90,000 கோடி மதிப்பில் சூதாட்ட க்ளப்... உதயமாகிறது ஜப்பானின் முதல் கேசினோ! வரைபடம் வெளியீடு!

 
ஜப்பான் கேசினோ

ஓய்வறியாத கடின உழைப்புக்கு பெயர் பெற்ற நாடான ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த விவாதங்களின் முடிவில், ஜப்பானின் முதல் கேசினோ (சூதாட்ட கிளப் ) கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, துறைமுக நகரமான ஓசாகாவில் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த சூதாட்ட மன்றம் கட்டப்படவுள்ளது. 2029ம் ஆண்டில் இது செயல்படத் தொடங்கும். ஜப்பானில் 3 நகரங்களில் கேசினோ அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பெரும் லாபத்தைச் சொல்லி, ஜப்பான் அரசிடம் அனுமதிக்காக. வெளிநாட்டு சூதாட்டமன்ற உரிமையாளர்கள் காத்திருந்தனர். 

ஜப்பான் கேசினோ

இத்தகைய சூதாட்ட மன்றங்களுக்கு ஜப்பானில் எதிர்ப்பு இருந்தது. மக்களை சூதாட்டத்திற்கு அடிமையாக்கி, பல குடும்பங்களை சீரழிக்கும் என்று பலரும் எச்சரித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 64 சதவீதம் பேர் கேசினோ தேவையில்லை என்று ஓட்டுப்போட்டனர். அதையும் மீறி, அரசு இந்த சூதாட்ட மன்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஓசாகாவில் அமைக்கப்படும் சூதாட்ட மன்றத்தை எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனல் என்ற கம்பெனி கட்டுகிறது. இது தவிர, ஷிமாயுமே என்ற இடத்தில் கடலில் மணல் மேடு அமைத்து ஒரு கேசினோ கட்டப்படவுள்ளது. இந்த கேசினோக்களில் 24 மணி நேரத்துக்கு 6,000 யென்கள் வசூலித்து, இதில் ஒரு பகுதியை சூதாட்டத்துக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வுக்கு செலவிட உள்ளனர். 

ஜப்பான் கேசினோ

கேசினோக்கள் வெறும் சூதாட்டத்தை விட அதிகமான பொழுதுபோக்கு இடங்களாகவும் திகழ்கின்றன. அவற்றில் உணவகங்கள், பார்கள், நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களைக் கொண்ட பெரிய வளாகங்கள் அமைக்கப்பட உள்ளது. தேர்வு செய்ய பல சூதாட்ட விடுதிகள் இருப்பதால், எவை பார்வையிடத் தகுந்தவை என்பதைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளர்களுக்கு கடினமாக இருக்கும்.

அது சரி... உலகின் சிறந்த 10 கேசினோக்களின் லிஸ்ட் தெரியுமா? சாம்பிளுக்கு இந்த கேசினோக்கள் எங்கே இருக்கின்றன என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.. 

  1. வின், மக்காவ்
  2. வெனிஸ், லாஸ் வேகாஸ்
  3. ஏரியா, லாஸ் வேகாஸ்
  4. பெல்லாஜியோ, லாஸ் வேகாஸ்
  5. ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா, சிங்கப்பூர்
  6. காஸ்மோபாலிட்டன், லாஸ் வேகாஸ்
  7. கிரவுன் மெல்போர்ன், ஆஸ்திரேலியா
  8. கேலக்ஸி ஹோட்டல், மக்காவ்
  9. வெனிஸ், மக்காவ்
  10. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், மக்காவ்

ஆக, லாஸ் வேகாஸூம், மக்காவ்வும் தான் இப்போதைக்கு சூதாட்டக்காரர்களின் சொர்க்கபுரி. கேசினோக்கள் மக்கள் சூதாடச் செல்லும் இடங்கள், அவர்கள் வழக்கமாக தேர்வு செய்ய பலவிதமான கேம்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். இருப்பினும், சில சூதாட்ட விடுதிகள் மற்றவர்களை விட சிறந்தவையாகவே பார்க்கப்படுகிறது. நோ... நோ ... ஈர்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web