கடற்கரையில் விளையாட்டு... அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

 
பந்து

திருவனந்தபுரம் அருகே பீமப்பள்ளி கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, கடலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 10-ம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சென்ற இரு நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரிஹான், சஜித், திபின் ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். டியூசனுக்கு செல்லும் முன் கடற்கரையில் விளையாடியபோது பந்து கடலுக்குள் சென்றது. அதை எடுக்க முயன்ற தருணத்தில் திடீரென எழுந்த பெரிய அலையில் மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

மாணவர்கள் தத்தளிப்பதை பார்த்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரு மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் ரிஹான் அலையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!