திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா... உயர்நீதிமன்ற நீதிபதி கோயிலில் திடீர் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி திடீரென நேரில் ஆய்வு செய்தார்.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி தொடங்கியது. வரும் நவம்பர் 7ல் சூரசம்ஹாரமும், நவ. 8ல் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே போடப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று தங்கியுள்ள பக்தர்களிடம் சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள், சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளை அவர் பார்வையிட்டு, அங்கே தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். விடுதி அலுவலரிடம் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது, திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோயில் தக்கார் ரா.அருள் முருகன், இணை அணையர் சு.ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
