உணவு டெலிவரி ஊழியரை வெட்டி ரீல்ஸ் போட்ட கும்பல்... பெரும் பரபரப்பு!

 
சென்னை

சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல். முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞரை இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இந்த கொடூர தாக்குதலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டுப்பட்ட இளைஞர் எழுந்து ஓட முடியாமல் தரையில் படுத்தபடியே தன்னை காப்பாற்ற முயன்றார். இருந்தும் அந்த கும்பல் தொடர்ந்து பலமுறை அவரை வெட்டியுள்ளது. அப்போது அங்கிருந்த சில பொதுமக்கள் கற்கள் மற்றும் காலணிகளை வீசி தாக்குதலை தடுத்து இளைஞரை காப்பாற்றினர்.

கைது செய்யப்பட்ட விஷ்ணு, நந்தா மற்றும் சுந்தர்

தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் காயமடைந்தவர் பார்த்திபன் என்பதும், குடிபோதையில் தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!