வெள்ளையா இருக்க... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்!
மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அபுல் ரஹ்மான் மக்சூத் ஆலம் கான் (21) மீது நடுங்கவைக்கும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பிறந்தநாள் என்று அழைத்துவிட்டு, நண்பர்கள் என நம்பிய ஐந்து பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். மாதுங்கா கல்சா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ரஹ்மான், தன்னை விட வெள்ளையா இருப்பதாக அடிக்கடி கேலி செய்தவர்கள் இதையே வாய்ப்பாக பயன்படுத்தியதாக கூறுகிறார்.

திங்கட்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டம் என அழைத்த கும்பல், கேக்குடன் ரஹ்மானை சந்திக்க கேட்டுள்ளது. ஆனால் அவர் சென்றவுடன் கற்கள் வீசி தாக்கிய அவர்கள், பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானே சட்டையை கழற்றி தீ அணைத்துக் கொண்டதாகவும், தன்னை எரியும் நிலையில் பார்த்தும் யாரும் உதவவில்லை என ரஹ்மான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது வினோபா பாவே நகரில் உள்ள சிட்டி மருத்துவமனையில் 35% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அயாஸ் மாலிக், அஷ்ரஃப் மாலிக், காசிம் சௌத்ரி, ஹுஸைஃபா கான், ஷெரீஃப் ஷைக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கொலை முயற்சி அல்லாமல், ‘குற்றவியல் மரணம்’ பிரிவில் மட்டும் வழக்குப் பதிவு செய்ததை ரஹ்மான் கடுமையாக எதிர்த்து, சம்பவத்தின் கொடூரத்துக்கு ஏற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
