16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி உட்பட இருவர் கைது!
மேற்கு வங்காள மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தனது காதலனுடன் அப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி அங்கு வந்துள்ளார். சிறுமியின் காதலனும் திபன்கரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அந்த தொழிற்சாலையில் வைத்து சிறுமியை அவரது காதலனும், திபன்கரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறுமிக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர் அதிகாரி மற்றும் சிறுமியின் காதலனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
