நெகிழ்ச்சி... ரவுடி கும்பலிடம் குறுக்கே புகுந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய மாணவி!

 
மாரி

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த மாரி (44) கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் ஊர் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி ஊரில் உள்ள நுாலக கதவுகளை சிலர் உடைக்க முயன்றனர். இதனை அறிந்த மாரி, கிராம மக்களுடன் சென்று தடுத்து கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அன்று இரவு மாரியம்மன் கோவில் மேலத் தெருவில் மாரியை தாக்கினர். அதோடு அவரை வெட்டிமுயன்றனர். அந்த கும்பலில் ஒருவர் மாரியை வாளால் வெட்ட முயன்ற போது, பிளஸ் 2 படிக்கும் அவரது மகள் குறுக்கே பாய்ந்து, இடது கையால் தடுத்துள்ளார்.

மாரி

மற்றவர்கள் கூச்சலிட்டதால் தாக்க வந்தவர்கள் தப்பி ஓடினர். பின்னர் மாணவி மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காயமடைந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 'பிளேட்' பொருத்தப்பட்டது. நேற்று மாணவிக்கு செய்முறை தேர்வு நடந்ததால், கையில் கட்டுடன் சென்று தேர்வு எழுதினார். பின்னர், மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பெருங்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த விஜய் (34), கபிலன் (21), அசோக் (20), கமல் (21) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

மாரி

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஊருக்கு புதியவர்கள், அடையாளம் தெரியாதவர்கள், 'ரேஸ் பைக்'கில் எங்கள் ஊருக்கு வந்து கஞ்சா விற்கின்றனர். ஊர் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி, அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுவதால் பலமுறை ஊர்க்காரர்கள் கண்டித்துள்ளனர். சில ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி குற்றச்செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இப்பிரச்னையில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web