இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... பூண்டு விலை கடும் சரிவு!
ரூ.500, ரூ.600 என்று உச்சத்துக்கு போய்க் கொண்டிருந்த பூண்டு விலை தற்போது சர்ரெலென விலை குறைந்து கிலோ ரூ.100 என விற்பனையாகி வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தரமான பூண்டு விலை கிலோ ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றியுள்ள எம்.பாலாடா, கல்லகொரைஹாடா, கொல்லிமலை ஓரநள்ளி, தேனாடுகம்பை, கடநாடு, காரபிள்ளு, எப்பநாடு, பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளில் மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம் இருப்பதால், தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பூண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டு வரப்பட்டது இல்லத்தரசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் சமையலில் பூண்டு சேர்ப்பதைக் குறைக்க துவங்கினார்கள். கூடவே வெங்காயமும் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
அதேசமயம் பூண்டு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கர்களில் விவசாயிகள் பூண்டு பயிரிட துவங்கினார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பூண்டு விலை சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஊட்டி பூண்டு கிலோ ரூ.100க்கும், பிற மாநில பூண்டு கிலோ ரூ.80க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வரப்படுகிறது.
பூண்டு விலை கடும் சரிவை சந்தித்ததால் அதிகளவில் பூண்டு பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உதகை உழவர் சந்தையில் பூண்டு விலை கிலோ ரூ.80ல் துவங்கி அதிகபட்சமாக ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டதால் பூண்டு விற்பனை செய்ய மறுத்து, உழவர் சந்தை விவசாயிகள் கடைகளை நேற்று திறக்கவில்லை. விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைக்கு உழவர் சந்தை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "மேட்டுப்பாளையம் மண்டியிலேயே உதகை பூண்டு கிலோவுக்கு ரூ.100 தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூண்டு விளையும் உதகையில் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய முடியாது. நுகர்வோரின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் பூண்டு விற்பனை செய்ய மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படும்"' என்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
